ராமாயணம் எத்தனை ராமாயணம்

 Publisher: காலச்சுவடு பதிப்பகம்
 Published: June 2025
 Category: கட்டுரைத் தொகுப்பு
 Pages: 254

நாட்டார் ராமாயணம் தொடர்பாக 10, தெய்வங்கள் தொடர்பாக 15 என 25 கட்டுரைகன் இந்தத் தொகுப்பில் உள்ளன. ராமாயணம் தலைப்பில் உள்ள கட்டுரைகள் தமிழகம், கேரளம் மாநிலங்களில் வழக்கில் உள்ள தோல்பாவைக் கூத்து என்னும் நாட்டார் கலைகளில் நிகழ்த்தப்படும் ராமாயணம் தொடர்பானவை. இப்பகுதியில் கேரளத் தோல்பாவைக்கூத்து தொடர்பாக ஐந்து கட்டுரைகள் உள்ளன. கேரளத் தோல்பாவை கூத்தில் கம்பனின் பாடல்கள் பாடப்படுகின்றன என்னும் செய்தியை இந்தக் கட்டுரைகள் விரிவாகக் கூறுகின்றன.

தெய்வங்கள், தலைப்பில் உள்ள கட்டுரைகளில் பெருநெறித் தெய்வங்களும் நாட்டார் தெய்வங்களும் பற்றிய செய்திகள் வருகின்றன ஆனால் இவை எல்லாமே நாட்டா வழக்காறுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை பெரும்பாலும் இந்நூலில் உள்ள எல்லா கட்டுரைகளும் கள ஆய்வு அடிப்படையில் செய்திகள் சேகரிக்கப்பட்டு எழுதப்பட்டவை.