Publisher: காலச்சுவடு பதிப்பகம்.
Published: டிசம்பர் 2024
Category: கட்டுரை தொகுப்பு
Pages: 192
நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் சேகரிப்பின் போது ஏற்பட்ட கள ஆய்வு அனுபவம் , வரலாறு , நாட்டார் கலைகள் தொடர்பான 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். ஒரு வகையில் இந்த நூல் ஆசிரியரின் முந்தைய நூலான வயல்காட்டு இசக்கி தொகுப்பைப் போன்றது .
இந்த நூலின் முதல் பகுதியில் உள்ள கட்டுரைகள் நாட்டார் வழக்காறுகள் தொடர்பானவை. பாரதியும் திருவிதாங்கூரும் என்ற கட்டுரை வரலாறு தொடர்பானது.
இந்தப் பகுதியில் உள்ள கட்டுரைகள் எல்லாமே கள ஆய்வு அனுபவங்களின் வழி எழுதப்பட்டவை . வழக்காறுகளின் மாற்றம், அழிவு பற்றிய செய்திகள் இவற்றில் வருகின்றன.
இரண்டாம் பகுதியில் உள்ள எட்டு கட்டுரைகளில் ராஜ ரவிவர்மா என்னும் கட்டுரை தவிர பிற எல்லாமே நாட்டார் கலைகள் பற்றியவை . இந்தக் கட்டுரைகள் காலச்சுவடு , காக்கைச்சிறகினிலே , உங்கள் நூலகம் , மானுடம் ஆகிய இதழ்களிலும் தனிப்பட்டவரின் 60 மலர்களிலும் வந்தவை .