திவான் வெற்றி

 Publisher: நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் சென்னை
 Published: December 2025
 Category: கதைப் பாடல்
 Pages: 151

திவான் வெற்றி என்ற இந்த நூல் ஒரு கதைப்பாடல் ஆகும். இது திருவிதாங்கூர் அரசரான ராமவர்மா என்னும் தர்மராஜாவின் ( 1758 - 1798 ) காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திவான் கேசவ பிள்ளை என்பவரைப் பற்றியது, எழுதியவர் திருவானந்தம் ஆவார். இவர் நாஞ்சில் நாட்டு செண்பகராமன் புதூர் என்ற ஊரைச் சார்ந்தவர் தர்மராஜா காலத்தில் மைசூர் மன்னன் திப்பு சுல்தான் மீது படையெடுத்த போது (டிசம்பர் 1789 - மே 1790 ) அந்தப் போரில் திருவாங்கூருக்கு வெற்றியைத் தேடி தந்தவர் திவான் கேசவ பிள்ளை என்ற கேசவதாஸ் ஆவார் அந்த வெற்றியைப் பாராட்டி எழுதப்பட்டது இந்த கதைப்பாடல் படித்தவர்களை விட பாமரர்களுக்காக இயற்றப்பட்டது இந்த நூல் திருவிதாங்கூரின் ஆரம்பகால சரித்திர நிகழ்வை அறிய உதவும் சமகால சான்றாகவும் இதைக் கொள்ளலாம் என்று இந்த நூலைப் பற்றி கவிமணி கூறியிருக்கிறார் இந்த நூலுக்கு விரிவான அடிக்குறிப்பும் உள்ளது இந்தக் கதை பாடலைப் பற்றிய விரிவான கட்டுரை பின் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது