Publisher: பரிசல் பதிப்பகம்
Published: October 2025
Category: சிற்றிலக்கியம்
Pages: 140
செண்பகராமன் பள்ளு என்ற இந்த நூல் கன்னியாகுமரி கடற்கரை பரதவரான செண்பகராமன் என்னும் நில உடமையாளரைத் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு புனையப்பட்ட சிற்றிலக்கியம் ஆகும். இது பள்ளு என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது. இந்த இலக்கியத்தின் காலம் 17 ஆம் நூற்றாண்டு.
தமிழில் முதல் பள்ளு இலக்கியமான முக்கூடல் பள்ளு போன்றது. பிற பள்ளு நூல்களிலிருந்து இது வேறுபட்ட தன்மையுடையது. இந்த நூலின் பாட்டுடைத் தலைவன் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவன். எழுதியவரும் கத்தோலிக்கர். அதனால் கத்தோலிக்கம் தொடர்பான செய்திகள் இதில் வருகின்றன. நூலில் வரும் பாண்டி நாட்டு பள்ளியும் நாஞ்சில் நாட்டு பள்ளியும் மாறுபாடு கொண்டு சண்டையிடும் பகுதி சிறப்பாக உள்ளது. 1943 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதலாவதாக இது அச்சில் வருகிறது.