Publisher: பரிசல் பதிப்பகம்
Published: 2025
Category: வரலாற்று நூல்
Pages: 120
தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் திருப்புடை மருதூர் என்னும் சிறு கிராமத்தில் உள்ள நாறும் பூநாத சுவாமி கோவிலின் வரலாறு இந்தக் கோவில். இறைவன் நாறும் பூ நாதன் இறைவி கோமதி அம்மா. இந்தக் கோவிலுக்கு மூன்று சிறப்புக்கள் உண்டு. எப்போதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணியின் கரையில் ஆறு ஏக்கர் பரப்பில் உள்ளது. இது ஒரு பறவைகளின் சரணாலயமும் கூட.
கோவில் கோபுரத்தில் நிலைகளில் வரலாற்று சிறப்புமிக்க சுவரோவியங்கள் உள்ளன. இந்த கோவில் இருக்கும் ஊர் ஆரவாரோமோ ஆடம்பரமோ இல்லாத மிகச் சிறிய கிராமம். இத்தகைய சிறப்படைய இந்த கோவிலை இந்த நூல் எளிமையாக சுருக்கமாக விவரிக்கிறது இந்த நூல்.
கோவில் அமைப்பு தலங்கள், புராணங்கள், கோபுர ஓவியங்கள், மரச்சிற்பங்கள், கல்வெட்டு கூறும் செய்திகள் என்னும் நான்கு அத்தியாயங்கள் கொண்டது. கோவில் தொடர்பான 30 படங்பகள் உள்ளன. இக்கோவிலுக்கு தமிழில் இரண்டு தலபுரணங்களும் சம்ஸ்கிருதத்தில் ஒன்றும் நாலு சிற்றிலக்கியங்களும் உள்ளன. இக்கோவில் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையிலும் ஓவியங்கள் உள்ளன. இவை விஜயநகர காலத்தவை என்கின்றனர்.
தலபுராணம் பிற புராண நிகழ்ச்சிகள் மட்டுமல்ல விஜயநகர காலத்தில் நடந்த குதிரை வணிகம் கப்பலில் குதிரைகளைக் கொண்டு வந்த செய்தி என பலவற்றை இந்த ஓவியங்கள் காட்டுகின்றன. இக்கோவிலில் 17 கல்வெட்டுகள் உள்ளன. இதன் பழமை 993 வரை எட்டுகிறது. முதல் ராசராசனின் இரண்டு கல்வெட்டுகள் இங்கே உள்ளன. இந்தச் செய்திகளை இந்த நூல் விளக்குகிறது.