Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
Published: டிசம்பர் 2023
Category: கட்டுரை தொகுப்பு
Pages: 224
கன்னியாகுமரி மாவட்டம் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பு. மூன்று பகுதிகள்.
முதல் பகுதியில் அனுபவம் வழக்காறுகள் பற்றி பத்து கட்டுரைகள். இரண்டாம் பகுதி வரலாறு சமூகம் பற்றிய 13 கட்டுரைகள். மூன்றாம் பகுதி வழிபாடு நாட்டார் தெய்வம் பற்றி ஆறு கட்டுரைகள். இவை எல்லாமே உங்கள் நூலகம், காக்கை சிறகினிலே, மானுடம், இந்திரன் கோட்டம் ஆகிய இதழ்களில் வந்தவை. இந்த 29 கட்டுரைகளில் நாட்டார் வழக்காற்று செய்திகள் இழையோடுகின்றன. எல்லா கட்டுரைகளிலும் கன்னியாகுமரி மாவட்ட வரலாற்றுச் செய்திகள் குறிப்பாக கூறப்படுகின்றன. கலை, சிற்பம், வழிபாடு, நாட்டார் தெய்வங்களின் அண்மைக்கால நிலை பற்றியும் இவை விவரிக்கின்றன.
நூலாசிரியர் கடந்த 45 ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் நேரடியாக சென்று சேகரித்த செய்திகள் சமூகவியல் பார்வையில் இக்கட்டுரையில் வெளிப்படுகின்றன.