வல்லன் குமாரன் விளை – கிராமியக் கலை விழா

நாகர்கோவில் அருகே வல்லன் குமாரன் விளை என்ற கிராமத்தில் ஒரு நாள் முழுக்க நடந்த கிராமியக் கலை விழாவில் அ.கா.பெருமாள் பங்குகொண்ட நிகழ்ச்சி. இந்த விழா நடக்க ஏற்பாடு செய்தவர் பெருமாள். இந்த கலைவிழாவில் இருபத்தொரு கலைக் குழுவினரும் 170 கலைஞர்களும் பங்கு கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக நாட்டார் கலைத்துறை மண்டல இயக்குனர் திரு காந்தி வந்திருந்தார்.