முதலியார் ஓலைகள்

 Publisher: காலச்சுவடு பதிப்பகம்.
 Published: Dec, 2016
 Category: கட்டுரை
 Pages: 175

தமிழினி வெளியீடாக வந்த (2005) முதலியார் ஆவணங்கள் என்னும் நூலின் தொடர்ச்சி போன்றது இந்த நூல். முதல் நூலில் விடுபட்ட எஞ்சிய 67 ஆவணங்கள் இந்த நூலில் வருகின்றன. முகவுரையும் விளக்கமும் இந்நூலில் உண்டு. ஒவ்வொரு ஆவணத்துக்கும் அறிமுகவுரை உண்டு. இது ஆவணத்தின் சுருக்கமாகவும் உள்ளது. பின்னிணைப்பில் அருஞ்சொல் விளக்கம், குளங்கள், ஆறுகள், மடங்கள் போன்றவற்றின் குறிப்புகள் உள்ளன. கவிமணியின் கையெழுத்துப் பிரதியில் இருந்த இரவி குட்டி பிள்ளை போர் - வில்லுப்பாட்டின் மூலம் அப்படியே பின் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று கதை பாடல்.

இந்நூலுக்கு வரலாற்றுப் பேரறிஞர் சுப்பராயலு அணிந்துரை எழுதியுள்ளார். அ. கா. பெருமாள் மிக ஆர்வத்துடன் முயற்சியுடனும் தொகுத்து பதிப்பித்துள்ள இந்த ஆவணம் தமிழ்நாட்டில் பரவலாக உள்ள ஆவணங்களை திரட்டவும் பயன்படுத்தவும் தூண்டுகோலாக அமையும் . அவருக்கு தமிழ்நாடு கேரளம் வரலாற்றாசிரியர்கள் யாவரும் மிகவும் கடமைப்பட்டவர்கள் என்கிறார்.