முதலியார் ஆவணங்கள்

 Publisher: தமிழினி, சென்னை.
 Published: Jan, 2006
 Category: கட்டுரை
 Pages: 222

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்திலுள்ள அழகியபாண்டியபுரம் என்ற ஊரில் கிடைத்த ஓலை ஆவணங்களின் தேர்ந்தெடுத்த தொகுப்பு திருவிதாங்கூர் அரசர் களுக்காக நாஞ்சில் நாட்டில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த பெரிய வீட்டு முதலியார் என்று அழைக்கப்பட்ட சைவ வேளாளர் குடும்பங்கள் இரண்டு பேரின் வீடுகளில் 600க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளை கவிமணிதேசியவினாயகம்பிள்ளைசேகரித்துதிருவனந்தபுரம்அருங்காட்சியகத்திற்குக் கொடுத்துள்ளார் இந்த ஓலைகளில் முக்கியமான ஒலைகளைப் பதிவு செய்து வைத்திருக்கிறார் இது பெரும்பாலும் 1903 ல் நடந்த நிகழ்ச்சி அந்த ஓலை ஆவணங்களில் 90 ஒலைகளை தெரிந்தெடுத்து முகவுரையுடன் பதிப்பித்துள்ளார் இந்நூலாசிரியர் இந்நூலின் பகுதி ஒன்றில் ஆவணங்கள் பற்றிய 67 பக்க ஆராய்ச்சியுரை உள்ளது இரண்டாவது பகுதி ஆவணங்களின் மூல ஓலைகள் உள்ளன இவற்றுக்கு விளக்கமும் உண்டு மூன்றாம் பகுதியில் 13தலைப்புகளில் அச்சில் வராத ஆவணங்கள் சில கொடுக்கப்பட்டுள்ளன நான்காம் பகுதியில் இந்திய பஞ்சாங்கம் இந்திய ஆண்டுகள் தொடர்ச்சி வரிசைப் பட்டியல் அளவைகள் திருவிதாங்கூர் நாணயம் உட்பட ஏழு தலைப்புகளில் செய்திகள் உள்ளன.