கே. என் சிவராஜ பிள்ளை இயற்றிய நாஞ்சி வெண்பா

 Publisher: நீயூ செஞ்சூரி புக் ஹவுஸ் சென்னை
 Published: January 2026
 Category: செய்யுள்
 Pages: 88

தமிழறிஞர் கே என் சிவராஜ பிள்ளை சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி துறையில் இருந்த காலத்தில் (1926 - 1936) எழுதிய நூல் நாஞ்சி வெண்பா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நூல் வெளி வருகிறது நாஞ்சில் நாட்டின் குறிஞ்சி முதலிய நான்கு நிலங்கள். மலை வளம், ஆற்று வளம், குளங்கள், ஊர்கள், பழைய வரலாறு, வரிக் கொடுமை, நாட்டு மக்கள் வழிபாடு, நாட்டார் தெய்வங்கள், வழிபாட்டு முறை, நாஞ்சில் நாட்டுக்கு வந்த யாசகக் கலைஞர்கள் நாட்டார் கலை நிகழ்த்த வந்தவர்கள் என பல செய்திகளை 240 வெண்பா க்களில் விவரிக்கிறது. இந்த நூல் சிவராஜ பிள்ளை தன் சமகாலத்தில் பார்த்ததை கேட்டதை இந்த நூலில் விவரிக்கிறார். வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு பாடல்களுக்கு விரிவான உரையும் அடிக்குறிப்புகளும் இந்த நூலில் உள்ளன