நாஞ்சில் நாட்டு தெய்வங்கள்
Author: அ.கா.பெருமாள் Publisher: தன்னனானே பதிப்பகம், சென்னை. Published: Nov, 2021 Pages: -இந்த நூல் அனுபவம் ஆய்வு சந்திப்பு என மூன்று பகுதிகளை கொண்டது. அனுபவப்பகுதியில் 15 கட்டுரைகள் உள்ளன. இவை உங்கள் நூலகம் இது பெரிய எழுத்து குமுதம் தீராநதி புதிய ஆராய்ச்சி ஆகிய இதழ்களிலும் தமிழ் உணர்வு என்ற நூலிலும் வந்தவை. அ. கா. பெருமாளின் சுண்ணாம்பு கேட்ட இசக்கி என்ற முந்தைய புத்தகத்தில் வந்த அனுபவம் கட்டுரை போன்றவை.
இவை சின்னகுட்டி என்னும் தேவதாசியிடம் பேசிய பேச்சு இரண்டு கட்டுரைகளாக இதில் வந்துள்ளன. பண்பாடு என்று நாம் முக்கியமாக நம்பிக் கொண்டிருக்கும் பல விஷயங்களை மரபு உடைத்துக்கொண்டு வந்திருப்பதை இக்கட்டுரையை லாவகமாக சுற்றிக்கொண்டு நகர்கிறது.
ஆய்வு என்னும் இரண்டாம் பகுதியில் ஆறு கட்டுரைகள் உள்ளன. இவையும் பனுவல் போன்ற இதழ்களிலும் தொகுப்புகளிலும் வந்தவை. தமிழக பழங்குடிகள் ஆண்டாளும் அமுக்க மாலியதாகவும் உட்பட உள்ள இக்கட்டுரைகள் நாட்டார் வழக்காற்று செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை.
மூன்றாம் பகுதியில் அ. கா. பெருமா ளுடனான பேட்டி வருகிறது. இந்து தமிழ், குமுதம் தீராநதி இரண்டிலும் வந்தவை. தீராநதி சந்திப்பு 32 பக்க நீண்ட உரையாடல் ஆகும். வயல்காட்டு இசக்கி நூல் வெழி வந்த போது தமிழின் சிறந்த புத்தக வரிசையில் ஒன்றாக இந்து தமிழ் பத்திரிகை தேர்வு செய்தது. சென்னை புத்தகச் சந்தையில் (டிசம்பர்) அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்றாகவும் இது இருந்தது.