தென்காசி விஸ்வநாதர் ஆலயம்

 Publisher: பரிசல் புத்தக நிலையம்
 Published: 2025
 Category: வரலாற்று நூல்
 Pages: 120

தென்காசி மாவட்ட தலைநகரம், தென்காசி நகரம் மத்தியில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் குறித்த வரலாற்று நூல். தலபுராணம், கோவில் வரலாறு, கட்டுமானம், கோவில் சிற்பங்கள், கோபுரம் கல்வெட்டுச் செய்திகள் என ஐந்து அத்தியாயங்களைக் கொண்டது. பின் இணைப்பில் கோவில் தலபுராணம் கல்வெட்டுக்கள் உட்பட 11 தலைப்புக்கள் 58 படங்கள் உள்ளன. கோவிலின் சிறப்பு மிகப்பெரிய வளாகமும் கோபுரமும் கொண்ட கோவில்களில் இது முக்கியமானது.

தென்காசி கோவிலுக்கு என்று தனியான தலபுராணம் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ளது. தமிழில் தலபுராணத்தை எழுதியவர் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர். இந்தக் கோவிலின் கட்டுமான பணி 1446ல் ஆரம்பித்து 1692-ல் முடிந்தது. கோவில் இறைவன் விஸ்வநாதன் இறைவி உலகம் முழுதுடையாள் (உலகம்மாள், கோவில் கோபுரம் வேலை 1457 இல் ஆரம்பித்து 1518 இல் முடிந்தது 19 ஆம் நூற்றாண்டில் கோபுரம் நெருப்பால் அழிந்தது மறுபடியும் ஒன்பது நிலைகளைக் கொண்ட இந்த கோபுரம் 1984 இல் கட்டி முடிக்கப்பட்டது. பிற்கால பாண்டியர்களில் தென்காசியைத் தலைநகராக கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களின் கட்டுமான கோவில் இது. கோவிலில் 52 கல்வெட்டுகள் காணப்படுகின்றன, இவற்றில் காணப்படும் செய்திகள் பெருமளவில் பாடல் வடிவில் உள்ளன என்பது கோவிலின் சிறப்பு. இந்தச் செய்திகள் இந்த நூலில் விரிவாகச் சொல்லப்படுகின்றன.