தெக்கத்திக் கதைப்பாடல்கள்

 Publisher: காவ்யா பதிப்பகம்
 Published: 2024
 Category: கட்டுரை தொகுப்பு
 Pages: 861

அ.கா.பெருமாள் ஏற்கனவே பதிப்பித்து வெளியிட்டு இருந்த பொன்னிறத்தாள் கதை(1997), இராம கீர்த்தனம் (2000),இயக்கியம்மன் கதையும் வழிபாடும்(2002), குருகுல மக்கள் கதை பாண்டவர் சரித்திரம் (2003), சித்தூர் தளவாய் மாடன் (2004), நல்லதங்காள் கதை (2004) ஆகிய ஆறு கதைப்பாடல்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. இவற்றில் நல்ல தங்காள் கதை தவிர்த்த பிற ஐந்து கதைகளும் நாட்டார் தெய்வக் கோவில்களில் விழாக்களில் வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படுகின்றன

அதனால் இந்தக் கதைப் பாடல்களின் பதிப்பு கள ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்டது. பொன்னிறத்தாள் கதை தில்லி திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் இருந்தது. சித்தூர் தளவாய் மாடன் கதை வாய்மொழி மரபில் இருப்பது வில்லிசை நிகழ்ச்சியின் போது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு எழுதப்பட்டது. பொன்னிறத்தான் கதை ஏட்டிலிருந்து பெயர்க்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது.