தமிழ்ச் சான்றோர்கள்

தமிழ்ச் சான்றோர்கள்

 Author: அ.கா.பெருமாள்  Publisher: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்  Published: Nov, 2022
 Pages: 263

இந்நூலின் ஆசிரியர் ஏற்கனவே எழுதிய தமிழறிஞர்கள் என்னும் நூலின் இரண்டாம் பகுதி தான் தமிழ்ச் சான்றோர்கள் என்ற இந்த நூல். இதில் 37 தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் உள்ளன முந்திய நூலைப் போலவே தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எழுதிய நூல்கள், தமிழுக்கு ஆற்றிய தொண்டு ஆகியன சுருக்கமாக இந்நூலில் தரப்பட்டுள்ளன.

அந்தக் கால தமிழறிஞர்களிடம் சமஸ்கிருத வெறுப்பு இல்லை.சிலர் அந்த மொழியை நன்கு அறிந்திருந்தனர். 1894 ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து தமிழகத்திற்கு ஸ்லேட் வந்தாலும் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் 1920 வரை மாணவர்கள் மணலில் தான் எழுதிப் பழகினார்கள் தமிழ் அறிஞர்களில் பலர் ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இவர்களில் பலர் அச்சு புத்தகங்களை படித்தாலும் ஏட்டை படிக்கும் திறன் பெற்றிருந்திருக்கிறார்கள் என பல செய்திகள் இன்னூலில் உள்ளன.

தமிழ் இலக்கிய மரபை ஓரளவு அறிந்த வாசகன் கூட அறியாத செய்திகள் இந்நூலில் உள்ளன. கிருஷ்ணசாமி நாயுடு, இரா. திருமுருகன், தி.ந ராமச்சந்திரன், மணி திருநாவுக்கரசு என்னும் தமிழறிஞர்கள் பற்றியும் இந்நூலில் தகவல்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட தமிழ் அறிஞரைப் பற்றி முழுமையாக அறிவதற்கு இந்த நூல் உதவும்.