தமிழ்க் கதை பாடல்கள்

 Publisher: காவ்யா பதிப்பகம், சென்னை.
 Published: Jan, 2022
 Category: கட்டுரை
 Pages: 143

கதைப்பாடல்கள் என்ற இந்த நூல் தமிழக நிகழ்த்து கலைகளில் பாடப் படுவதற்கு அல்லாமல் படிப்பதற்காக எழுதப்பட்டவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த நூல் எழுத 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அச்சில் வந்த வில்லுப்பாட்டு கதைகளும் கதைப் பாடல்களும் உதவின. அல்லாமல் ஏட்டு வடிவிலும் தாள் வடிவிலும் உள்ள கதைப் பாடல்களும் பயன் படுத்தப்பட்டன இந்த நூலில் கதைப்பாடல்கள் வரையறை கதைப் பாடல்களும் அம்மானையும் வில்லும்பாடல்களும் தெக்கன் பாட்டு களும் ஆசிரியர் காலம் பதிப்பு அமைப்பும் வகைமையும் வரலாற்றுக் கதைப்பாடல்கள் புராணம் இதிகாசம் செவ்விலக்கியம் இதிகாச புராண கதை பாடல்கள் தெய்வப் புனைவுக்கதைப்பாடல்கள் சமூக கதைப்பாடல்கள் ஆகிய பத்து அத்தியாயங்கள் உள்ளன பின்னிணைப்பில் தெக்கன் பாட்டுகள் பட்டியல் கதைப் பாடல்களின் பட்டியல் வகுப்பு வாரியாக உள்ள பட்டியல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன தமிழில் கதைப் பாடல்கள் பற்றிய பொதுவான நூல்கள் குறைவு அவற்றில் இந்தப் புத்தகம் முக்கியமானது என வழக்காற்றில் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.