சிவாலய ஓட்டம்

 Publisher: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் .
 Published: Mar, 2011
 Category: கட்டுரை
 Pages: 247

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் விளவங்கோடு வட்டங்களில் உள்ள 12 சிவாலயங்களில் பற்றிய வரலாறு மாசிமாத சிவராத்திரி விழாவில் இந்த சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓடி சென்று வழிபடுவது என்ற வழக்கம் நடைமுறையில் உள்ளது இவ்வாறு செல்கின்ற போது கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டுச் செல்லும் வழக்கமும் இன்று உள்ளது இவ்வாறு சைவ-வைணவ ஒற்றுமையை உணர்த்தும் இந்தக் கோவில்களின் வழிபாடு பற்றிய செய்திகள் வாய்மொழியாகவே உள்ளன ஓட்டத்தில் முதல் கோவில் முஞ்சிறை திருமலை கோவில் பின் , திக்குறிச்சி | திற்பரப்பு | திருநந்திக்கரை , பொன்மனை , திருப்பன்னிட் பாகம் கல்குளம் மேலாங்கோடு திருவிடைக்கோடு திருவிதாங்கோடு திருப்பன்னிக் கோடு இறுதியாக நட்டாலம் இந்த ஊர் கோவில்களின் வரலாறு விழா வழிபாடு பற்றிய செய்திகள் இந்நூலில் உள்ளன நூலின் பின்னிணைப்பில் இந்தக் கோவில்கள் தொடர்பான 22 செய்திகள் உள்ளன பன்னிரு கோவில்களின் படங்கள் 200க்கு மேல் உள்ளன இந்த நூல் பெரும்பாலும் களஆய்வு செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது இந்தக் கோவில்களுக்கு நூலாசிரியர் பத்து முறைகளுக்கு மேல் பயணம் செய்திருக்கிறார் இன்னும் மூன்று பதிப்புகளைக் கண்டது இந்நூலின் சில பகுதிகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நாளிதழ்களில் வந்துள்ளன.