குருகுல மக்கள் கதை

 Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை.
 Published: Nov, 2003
 Category: கட்டுரை
 Pages: 208

வில்லிசை நிகழ்ச்சியில் பாடப்படும் கதைப்பாடலின் பதிப்பு கன்னியாகுமரி மாவட்டம் புதூர் அருகே தென்னந்தோப்பிலின் நடுவே உள்ள பஞ்சபாண்டவர் கோவிலில் இக்கதை பாடல்படுகிறது. இக்கோவிலில் பஞ்ச பாண்டவர் கவுரவர்கள் காத்தாரி ஆகியோர் சுவரோவியங்களாக உள்ளனர் இத்ததைப் பாடல் 5480 வரிகள் கொண்டது. இதன் ஆரம்பம் பாரதக் கதையின் முதல் பகுதி என்றாலும் பீமனைக் கதாநாயகனாகக் கொண்டு நடக்கிறது. காத்தாரி பீமனைக் கொல்ல எடுக்கும் முயற்சியே இதில் விவரிக்கப்படுகிறது இக்கதைப்பாடல் குறிப்பிட்ட கோவிலுக்கு மட்டுமே உரியது. இது குறிப்பிட்ட குடும்பத்தினர் மட்டுமே வழிபடும் கோவிலும் கூட.