காலச்சுவடு கண்ணனுக்கு பாராட்டு

காலச்சுவடு மாத இதழ் ஆசிரியர் இரா.சுந்தரம் என்ற கண்ணனுக்கு பிரான்ஸ் அரசு செவாலியே என்னும் உயர்ந்த விருதை கொடுத்து கௌரவித்துள்ளது.  காலச்சுவடு பணியாளர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 4 மணிக்கு காலச்சுவடு அலுவலகம் மொட்டை மாடியில் பாராட்டுக் கூட்டம் நடத்தினர். இந்த சிறு கூட்டத்திற்கு அ.கா. பெருமாள் தலைமை தாங்கி கண்ணனை பாராட்டிப் பேசினார். பிரான்ஸ் நாட்டின் செவாயைய விருது தமிழகத்தில் இதுவரை 16 பேர்கள் பெற்று உள்ளனர் இதழாளர்கள் என்னும் வரிசையில் கண்ணன் தான் இந்த விருதை முதலில் பெறுகிறார் என்றார் பெருமாள்.