Publisher: பவித்ரா பதிப்பகம் கோவை
Published: December 2025
Category: கட்டுரைகள்
Pages: 202
பல்வேறு இதழ்களில் வந்த 20 கட்டுரைகளின் தொகுப்பு இவற்றில் நாட்டார் வழக்காறுகள் தொடர்பாக 11 கட்டுரைகளும் வரலாறு சமூகம் தொடர்பாக 5 இலக்கியம் மொழி தொடர்பாக 4 கட்டுரைகள் உள்ளன.
இவற்றில் எல்லாவற்றிலும் நாட்டார் வழக்காற்றுத் தன்மை இழையோடுகிறது நாட்டார் வழக்காற்று கட்டுரைகளில் கள ஆய்வு அனுபவம் முன்னிலைப்படுத்தப்படுகிறது முத்துசாமிராவ் குறித்த முதல் கட்டுரை முழுக்கவும் அலைந்து சேகரித்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது .
தென் குமரியில் சமஸ்கிருத உறவு என்ற கட்டுரை செய்திகளின் தொகுப்பு என்றாலும் அதில் கள ஆய்வு செய்திகள் அதிகம் நாட்டார் நிகழ்த்து கலைஞர்களின் இன்றைய நிலை இந்த நூலில் கோடிட்டு காட்டப்படுகிறது பல்லவ அரசனான முதல் மகேந்திரவர்மனின் இரண்டு நாடகங்கள் பற்றிய கட்டுரையும் உள்ளது