இராமன் எத்தனை இராமனடி

 Publisher: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் .
 Published: Sep, 2010
 Category: கட்டுரை
 Pages: 231

நாட்டார் வழக்காற்றில் பேசப்படுகின்ற ராமாயண கதைகள் முழுவதும் தொகுக்கப்படவில்லை அத்தகைய முயற்சியில் ஈடுபட்ட வெளிப்பாடு இந்த நூல் இந்த நூலில் முதல் பகுதியில் எட்டு கட்டுரைகள் உள்ளன ராமன் எத்தனை ராமனடி , கிழக்கில் பரவிய ராமாயணம் , ஜெயின ராமாயணம் தோல்பாவைக்கூத்து ராமாயணம் , இராமாயண தோல் பாவைக்கூத்து | ராம கீர்த்தனம் | சூர்ப்பனகையின் பரிதாபம் தக்கை இராமாயணம் ஆகிய இந்தக் கட்டுரைகள் எல்லாம் இராமாயணத்தின் பல்வேறு படிநிலைகளை கூறுவன இவை எல்லாமே வழக்காறு தொடர்பானவை இரண்டாம் பகுதியில் கோசலை திமிங்கிலம் காத்த கதை உட்பட மயில் ராவணன் கதை முடிய 17 கதைகள் உள்ளன பின்னிணைப்பில் ராமாயணம் தொடர்பான செய்திகள் கூறப்படுகின்றன இராமாயணம் தொடர்பான நாட்டார் வழக்காற்று செய்திகளை வெளிப்படுத்தும் 120 கருப்பு-வெள்ளை படங்கள் நூலில் பரவலாக கொடுக்கப்பட்டுள்ளன நான்கு பதிப்புகளை கண்ட இந்தப் புத்தத்தின் பல கட்டுரைகள் உங்கள்நூலகம் மாத இதழ் காலச்சுவடு இதழ் ஆகியவற்றில் வந்தவை.