அய்யா வைகுண்டரும் அகிலத்திரட்டும்

 Publisher: காலச்சுவடு பதிப்பகம்.
 Published: டிசம்பர் 2023
 Category: கட்டுரை தொகுப்பு
 Pages: 126

தென் மாவட்டங்களில் வழக்கில் உள்ள அய்யாவழி என்னும் வழிபாட்டு பிரிவு பற்றிய செய்திகள் இந்த நூலில் விரிவாகக் கூறப்படுகின்றன.

பழைய தென் திருவிதாங்கூரில் (இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்) வாழ்ந்து ஞானம் பெற்ற முத்துக்குட்டி ஐயா என்னும் வைகுண்டர் (1809 - 1851) என்பவர் அருளிய அகிலத்திரட்டு என்னும் அம்மானை நூலை அ. கா. பெருமாள் 2009 இல் காலச்சுவடு பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார்.

அந்த நூலின் முகவுரை சில மாற்றங்களுடன் புதிய செய்திகள் சேர்க்கப்பட்டு சிறு நூலாக வெளிவருகிறது. இதில் அகிலத்திரட்டு அறிமுகம், அகிலத்திரட்டு சுருக்கம் என்னும் இரண்டு பகுதிகள் உள்ளன.

முதல் பகுதியில் ஐயா வைகுண்டரின் வரலாறு விரிவாக பேசப்படுகிறது. அய்யா அகிலத்திரட்டை எழுதிய வரலாறும் இப்பகுதியில் உள்ளது.

அகிலத்திரட்டு சுருக்கம் என்னும் இரண்டாம் பகுதியில் அய்யா அருளிய நூலின் சுருக்கம் எளிமையாக கூறப்படுகிறது. இந்த நூல் 1841 இல் எழுதப்பட்டது. அய்யா சொல்ல ஹரி கோபாலன் என்பவர் இதை எழுதி இருக்கிறார். இது அம்மானை வடிவில் 15,000 வரிகளை கொண்டது. ஏட்டு வடிவில் இருந்த இந்த நூல் 1939இல் அச்சில் வந்தது. இந்த நூல் பற்றிய விரிவான விளக்கம் இந்தப் பகுதியில் உள்ளது .