தமிழறிஞர்கள்

 Publisher: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
 Published: Oct, 2018
 Category: கட்டுரை
 Pages: 296

தமிழ் இலக்கியத்திற்கும் பண்பாட்டுக்கும் உழைத்த புத்தகங்கள் வெளியிட்ட ஆராய்ச்சி செய்த பதிப்பித்த தமிழறிஞர்கள் 40 பேரைப் பற்றிய விரிவான நூல் இந்நூலிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் தமிழினி மாத இதழில் வந்தவை சில கட்டுரைகள் காலச்சுவடு தமிழ் இந்து தீரா நதி உங்கள் நூலகம் இதழ்களில் வந்தன இந்த நூலை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும் என்று எழுத்தாளர் ஜெயமோகனின் தூண்டுதல் இந்நூல் வெளிவருவதற்கு ஒரு காரணம் தமிழ் அறிஞர்கள் வரலாற்றை சுவராசியமாக ஆரம்பித்து அவர்கள் தமிழுக்குச் செய்த பணி விரிவாக சொல்லி முடிப்பது இந்த நூலின் சிறப்பு ஒவ்வொரு கட்டுரைகளின் சிறப்பம்சம் இது வாசகனை படிக்க அலுப்பில்லாமல் கொண்டு செல்லும் நடை இந்த நூலைப் பற்றி விமர்சித்த தமிழ் இந்து பத்திரிகை தமிழறிஞர்களைப் பற்றி வாசகன் படிக்க வேண்டும் என்ற தூண்டுதலையும் ஆசையையும் இந்நூலின்ஒவ்வொரு கட்டுரையும் செய்கின்றது என்பது இதன் சிறப்பு என்று கூறியது நடிகர் கமலஹாசன் விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் மிக முக்கியமான நூல் என்று அறிமுகம் செய்தார் நூல் வெளியான சில மாதங்களில் முதல் பதிப்பு தீர்ந்துவிட்டது பின் இரண்டாம் பதிப்பும் ஓராண்டுக்குள் தீர்ந்து விட்டது இந்த நூல் கல்வியாளர் அல்லாதவரிடம் பரபரப்பையும் படிக்க வேண்டும் என்ற ஒரு தூண்டுதலையும் உருவாக்கி விட்டதை நூலாசிரியர் இல் பல கருத்தரங்குகளில் கண்டிருக்கிறார்.