No Image Available

பூத மடம் நம்பூதிரி

 Author: அ. கா. பெருமாள்  Publisher: காலச்சுவடு பதிப்பகம்  Published: 01 Jan, 2020  Pages: 177
 Description:

11 கட்டுரைகளின் தொகுப்பு. ஏழு கள ஆய்வு அனுபவ கட்டுரைகள்.பிற ஆய்வு. பூத மடம் நம்பூதிரி கட்டுரை தினமலர் நாளிதழில் வந்தபோது பரவலாக பேசப்பட்டது. மனைவியை சுமந்த கணவன் காதலனை சுமந்த குறத்தி இரண்டு கட்டுரைகளும் சமூகத்தில் மேல் கீழ் என எவையும் கிடையா என்பதை அனுபவ பூர்வமாக விளக்குவன. விஷ்ணுவுக்குப் படியளக்கும் சுடலை மாடன் கட்டுரை செய்திகள் மலை அடிவாரத்தில் கல்வெட்டு தேடிச்சென்ற அனுபவம் தொடர்பானது. நல்லா தெரியுது என்ற கட்டுரை தோல்பாவை கூத்து நிகழ்ச்சி பார்த்தபோது கிடைத்த அனுபவம். மரபில் தொடராத விவசாயம் என்ற கட்டுரை இராப்பாடி பாட்டின் வழியே சேகரித்த பழம் செய்திகளை கூறுவது. கலையின் நாயகிகள் என்ற கட்டுரை தேவதாசிகளின் நாட்டார் மரபு செய்திகள் அடிப்படையில் எழுதப்பட்டது. தென் திருவிதாங்கூரில் வாழ்ந்த தேவதாசிகள் பற்றிய செய்திகளும் இதில் உண்டு. திவான் வெற்றி என்னும் அச்சில் வராத ஒரு கதைப்பாடல் பற்றியது திப்பு சுல்தானைப் பற்றிய கட்டுரை .பிராமணர்களின் ஒரு பிரிவினரான கொதுகுல சபையார் என்பவரை பற்றிய கல்வெட்டுச் செய்திகள் வாய்மொழி தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டது. கொடுத்துள்ள சபையார் என்ற கட்டுரை.

இந்நூல் பற்றி ‘தினமலர் (மார்ச் 2 2020)’ …. இந்த நூலில் உள்ள பல செய்திகள் தொன்மங்கள் போல் உள்ளன. ஆனால் எல்லாம் கள ஆய்வுகளில் சேகரிக்கப்பட்டு  எழுதப்பட்டவை. இன்றைய வாசகனுக்கு இவை புனைகதை போல் உள்ளன என்று கூறியது .

 Back