பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

 Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
 Published: Oct, 2018
 Category: கட்டுரை
 Pages: 152

நாட்டார் வழக்காறுகள் தொடர்பான 12 கட்டுரைகளின் தொகுப்பு பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ ,. தன்னை அழிப்பதும் அரசியல்தான் கோபுரமேறிச் சாடி உயிர் விடுதல் பண்டை இலக்கியங்களில் பழமரபுக் கதைகள் நெருப்பில் தள்ளப்பட்டவர்கள் நாட்டார் தெய்வ வடிவங்கள் கேரள நாட்டார் மரபில் கண்ணகியின் கதை அகத்தியின் தொன்மங்களும் தொடர்ச்சியும் பழந்தமிழர் கலைகளும் நீட்சியும் நிலைத்த பனுவலும் நிகழ்த்துதல் பனுவலும் பழந்தமிழகத்தில் பெண் கலைஞர்கள் நெட்டூரி காந்தாரி ஆகிய 12 கட்டுரைகளின் தொகுப்பு. இவற்றில் சில கருத்தரங்குகளில் படிக்கப்பட்டவை சில உங்கள் நூலகம் காலச்சுவடு போன்ற பத்திரிகைகளில் வந்தவை. இந்தக் கட்டுரைகளில் முதல் நான்கு கட்டுரைகள் நாட்டார் வழக்காறுகளுடன் தொடர்புடையவை பொதுவான செய்திகளை உள்ளடக்கியவை அடுத்த ஐந்து கட்டுரைகள் நாட்டார் வழிபாடு நாட்டார் தெய்வங்கள் வடிவங்கள் கேரள கண்ணகி வழிபாடு நாட்டார்வழிபாடு ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை இறுதி மூன்று கட்டுரைகள் நாட்டார் கலைகளுடன் தொடர்புடையவை பழம் இலக்கியங்களில் சொல்லப்பட்ட நாட்டார் கலைகள் தொடர்ந்து இன்றும் செயல்பாட்டுடன் இருத்தல் பெண் கலைஞர்களின் நிலை. நிகழ்த்துக் கலைகளின் நிலைத்த தன்மை மாறும் தன்மை ஆகியவற்றை பற்றி பேசுவது இந்தக் கட்டுரைகள் எல்லாமே ஒரு வகையில் நாட்டார் வழக்காற்றியல் வழி தமிழ் பண்பாட்டை மீட்டெடுப்பன என்று சொல்லலாம் .