நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்

 Publisher: காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவில்.
 Published: Jan, 2010
 Category: கட்டுரை
 Pages: 248

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய மருமக்கள் வழி மான்மியம் நூலின் செம்பதிப்பு ராஜநாராயணனின் வாழ்த்துரை பதிப்பாசிரியரின் நீண்ட ஆராய்ச்சியுரை வையாபுரிப் பிள்ளையின் முன்னுரை மருமக்கள் மான்மியம் முதலில் வெளி வந்த போது தமிழன் இதழில் வந்த சிறு முகவுரை ஆகியன நூல் ஆரம்பத்தில் உள்ளன பின்னிணைப்பில் மான்மியம் தொடர்பான ஏழு தமிழ் கட்டுரைகளும் வேளாளர் பற்றி கவிமணி எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றும் மான்மிய ஒழிப்பு குறித்த அரசு அறிக்கையும் நீதிமன்ற குறிப்பும்உள்ளன கவிமணியின் அபூர்வமான சில புகைப்படங்களும் உதவிய நூல்களின் பட்டியலும் இறுதிப் பகுதியில் உள்ளது பாரி நிலையம் வெளியிட்ட மருமக்கள் மான் மிய பதிப்பில் சில அடிக்குறிப்புகள் தவறாக உள்ளன நிறைய அடிக்குறிப்புகள் இல்லை மான்மியம் பத்திரிகையில் வெளிவந்த போது கொடுக்கப்பட்டிருந்த முகவுரையும் இல்லை பாரி நிலையை பதிப்பில் 248 அடிக்குறிப்புகள் உள்ளன இந்த ஆராய்ச்சி பதிப்பில் 498 அடிப்குறிப்புகள் உள்ளன.