தென்குமரியின் கதை

 Publisher: யுனைடெட் ரைட்டர்ஸ், சென்னை.
 Published: Nov, 2003
 Category: கட்டுரை
 Pages: 335

கன்னியாகுமரி மாவட்ட த்தின் 2000 வருட வரலாற்றை கூறும் நூல் ஆய் அண்டிரன் முதல் 1956 வரை, தேசிய சமூக விடுதலைகள் , மதங்களும் பங்களிப்பும், கல்வி கலைகள் என்னும் நான்கு பெரிய தலைப்புகளையும் இருபத்தி எட்டு உள் தலைப்புகளையும் கொண்ட நூல் முதல் பகுதியில் சங்க காலத்து அரசர்கள் முதல் 1956 வரையுள்ள கூறப்பட்டுள்ளது இரண்டாம் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அடிமைகளின் நிலை கோவில் நுழைவுப் போராட்டம் சுதந்திரப் போராட்டம் ஆகிய தேசிய சமூக விடுதலை செய்திகள் வருகின்றன மூன்றாம் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வைணவ சைவ கோவில்கள் கோவில் நிர்வாகம் தேவதாசிகளின் நிலை புத்தம் சமணம் கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மதங்களின் பங்களிப்பு பற்றி விரிவாக பேசப்படுகிறது. இறுதிப்பகுதியில் இந்த மாவட்டத்தின் கல்விக்கூடங்கள் மருத்துவ வளர்ச்சி விழாக்கள் கலைகள் படிப்பாளிகள் பற்றிய செய்திகள் வருகின்றன. பின்னிணைப்பில் கன்னியாகுமரி மாவட்டம் தொடர்பாக, ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்த நூற்களின் பட்டியல் உள்ளது 2004 ஆம் ஆண்டு தமிழில் வந்த சிறந்த நூல்களில் ஒன்று என தமிழ் வளர்ச்சிக் கழகம் இந்நூலைப் பாராட்டி நூலாசிரியருக்குவிருது கொடுத்தது இந்த மாவட்டத்தில் உள்ள அபூர்வமான சில ஒளிப்படங்களும் இந்நூலில் உள்ளன.