தாணுமாலையன் ஆலயம்

 Publisher: தமிழினி, சென்னை.
 Published: Jun, 2008
 Category: கட்டுரை
 Pages: 400

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்னும் ஊரில் இருக்கும் தாணுமாலையன் சிவன் கோவிலைப் பற்றிய விரிவான வரலாறு இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து உழைத்து உருவாக்கப்பட்ட நூல். இந்த நூல் ஊரும் பேரும் அனுசூயையின் கதை , கோவில் அமைப்பும் பரிவார தெய்வங்களும் , பூஜைகளும் விழாக்களும் | மகாசபையும் முதல் அறங்காவலர் வரை , பூசகரும் பணியாளரும் ,கோவிலின் சமூக ஊடாட்டம் , கல்வெட்டுச் செய்திகள் , சிற்பங்களும் ஓவியங்களும் என்னும் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டது . பின்னிணைப்பில் கோவில் தொடர்பாக 32 தகவல்கள் 19 வண்ணப்படங்கள் 170 கருப்பு-வெள்ளை படங்கள் சுசீந்திரம் ஊரின் வரைபடம் கோவில் வரைபடம் என உள்ளன கல்வெட்டியல் சிற்பவியல் அறிஞர் செந்தி நடராஜன் அணிந்துரை வழங்கியுள்ளார் நூலாசிரியரின் நீண்ட முகவுரை உண்டு இந்நூல் கோவில்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் கோவில் தொடர்பான ஆவணங்கள் இரண்டு செப்பேடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கள ஆய்வில் கிடைத்த செய்திகளை பெரிதும் பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத் தகுந்தது வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே கே பிள்ளை இந்தக் கோவிலை தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக மேற்கொண்டுள்ளார் ஆங்கிலத்தில் புத்தகமாக வந்துள்ளது அந்த புத்தகத்திலிருந்து அப்பால் பட்ட செய்திகளை குறிப்பாக நாட்டார் வழக்காறுகளில் இருந்து பெறப்பட்ட செய்திகளை இந்த நூலில் காட்டுகிறார் நூலாசிரியர்.