சடங்கில் கரைந்த கலைகள்

 Publisher: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் .
 Published: Feb, 2010
 Category: கட்டுரை
 Pages: 184

தென் மாவட்டங்களில் நிகழும் நான்கு கலைகளைப் பற்றிய ஆய்வு நூல் வில்லுப்பாட்டு , கணியான் ஆட்டம் , வில்லிசை ஒத்து நடக்கும் கலைகள் கண்ணன் விளையாட்டு , களம் எழுத்தும் பாட்டும் ஆகிய ஐந்து கட்டுரைகள் உள்ளன பின்னிணைப்பில் இந்தக் கலைகள் தொடர்பான "|1 செய்திகள் உள்ளன 25 கருப்பு-வெள்ளை படங்கள் இறுதிப் பகுதியில் உள்ளன இந்த நூல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிதி நல்கை பெற்று கள ஆய்வு செய்து எழுதப்பட்டது தமிழக நாட்டார் கலைகளில் விழாச் சடங்குகள் சார்ந்த நிகழ்பவை பெரும்பாலும் அழியாது என்னும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நூல் இந்த நூலில் கொடுக்கப்பட்ட கலைகள் சடங்குகளுக்காக இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன இந்திய நடுவண் அரசு இந்த நூலின் பிரதிகளைப் பெற்று இந்தியாவின் பல்வேறுநூல் நிலையங்களுக்கு கொடுத்திருக்கிறது இந்நூல் நான்கு பதிப்புகளை கண்டுவிட்டது.