கவிமணி கவிதைகள் (முழுவதுமான ஆய்வு பதிப்பு)

 Publisher: காவ்யா பதிப்பகம், சென்னை.
 Published: Feb, 2023
 Category: கட்டுரை
 Pages: 731

சி. தேசிக விநாயகம் பிள்ளை என்னும் (1876 - 1954) இயற்பெயர் உடைய கவிமணியின் மொத்த கவிதைகள் அடங்கிய ஆய்வுப் பதிப்பு. ஏற்கெனவே கவிமணியின் பெயரில் வெளியான கவிதை தொகுப்புகளில் இல்லாத பாடல்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன.

இவை கவிமணியின் கவிதைகள் வந்த மிகப் பழைய இதழ்களிலும் 800 பக்கங்கள் கொண்ட கவிமணியின் கையெழுத்து பிரதிகளில் இருந்தும் எடுக்கப்பட்டவை. முந்தைய பதிப்பில் உள்ள அடிக் குறிப்புகள் அல்லாமல் 620 க்கு மேற்பட்ட அடிக் குறிப்புகள் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. கவிமணியின் முந்தைய பதிப்பு நூற்களில் சில பாடல்களுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகள் இந்த ஆய்வு பதிப்பில் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் கவிமணியின் கையெழுத்து பிரதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டது. கவிதைகளின் பாடபேதங்கள் அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் இருக்கும் பின்னிணைப்பில் கவிமணியின் வாழ்க்கை குறிப்பு, அவர் கவிதைகள் வெளிவந்த இதழ்களின் பெயர்கள், அவரைப் பற்றிய ஆய்வடங்கள், அவரின் கவிதைகளின் யாப்பு நிலை ஆகியன உள்ளன. இந்த ஆய்வு பதிப்பில் 1857 பாடல்கள் உள்ளன. முந்தைய பதிப்புகளில் உள்ள வையாபுரி பிள்ளையின் முகவுரைகளும் மருமக்கள் வழி மான்மியத்திற்கு தமிழன் இதழ் ஆசிரியர் 1916ல் எழுதிய அறிமுகவுரையும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.