கவிமணியின் கவிதைகள்

 Publisher: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை .
 Published: Sep, 2002
 Category: கட்டுரை
 Pages: 670

கவிமணி தேசிய வினாயகம் பிள்ளையின் மொத்த கவிதைகளின் தொகுப்பு இப்பதிப்பில் மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், ஆசிய ஜோதி உமார்கய்யாம் பாடல்கள், தேவியின் கீர்த்தனைகள் என்னும் ஐந்து தொகுதிகளில் உள்ள பாடல்கள் முழுவதும் உள்ளன முந்தைய பதிப்பில்இல்லாத பாடல்களும் இதில் சேகரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக மலரும் மாலையிலும் தொகுப்பில் 129 பாடல்கள் புதிதாக கண்டுபிடித்து சேர்க்கப்பட்டுள்ளன புதிய அடிக்குறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன பின்னிணைப்பில் கவிமணி கவிதைகள் தொடர்பாக 17 புதிய தகவல்கள் கவிமணியின் வெளிவராத புதிய படங்கள் ஆகியனவும் உள்ளன. பெருந்தொகுதி ஆக்கம் என்னும் வரிசையில் இந்த நூல் முக்கியமானது என தினமணி பத்திரிகை பாராட்டியது.