கவிமணியின் கட்டுரைகள்

 Publisher: தமிழினி, சென்னை.
 Published: Nov, 2004
 Category: கட்டுரை
 Pages: 158

கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் புதிய கட்டுரைகளின் பதிப்பு நூல் 1952 ல் கவிமணியின் உரை மணிகள் என்னும் தலைப்பில் பாரி நிலையம் வெளியீடாக வந்தது. அந்த நூலில் 22 கட்டுரைகளே உள்ளன. அவற்றில் இல்லாத 4 புதிய கட்டுரைகளும் இரண்டு பேட்டிகளும் இந்நூலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும் கவிமணியின் கட்டுரைகளை அவற்றின் அடிப்படையில் பகுத்துக் உள் தலைப்புகளுடன் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கவிமணியின் கட்டுரை தொகுதிக்கு வையாபுரிப்பிள்ளை எழுதிய முகவுரை இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நூல் பதிப்பாசிரியரின் விரிவான முகவுரை இந்நூலில் உண்டு கவிமணி தன் இறுதிக்காலத்தில் சில புத்தகங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளார் அந்த விமர்சன குறிப்புகளும் நூலின் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ளது.