இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை

 Publisher: காவ்யா பதிப்பகம்.
 Published: Apr, 2017
 Category: கட்டுரை
 Pages: 200

நூலில் உள்ள 29 கட்டுரைகளில் 24 கட்டுரைகள் தமிழ் இந்து நாளிதழில் வந்தவை. பிற காலச்சுவடு போன்ற இதழ்களில் வந்தவை. ஐந்து பகுதிகள் கொண்டது.

முதல் பகுதி நாட்டார் வழக்காறுகள் நாடகங்கள் என்ற தலைப்பில் வருவது. இதில் பதினைந்து கட்டுரைகள் உள்ளன. இவை நாட்டார் வழக்காறுகளின் சமகால பிரச்சினைகளின் பார்வை பற்றியவை. நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும் அப்படியே.

இரண்டாம் பகுதியில் ஆறு கட்டுரைகள் உள்ளன. இவை சமகால கல்வி பற்றி மட்டுமல்ல திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றியும் பேசுகின்றன.

மூன்றாம் பகுதியில் மகாத்மா பற்றிய கட்டுரைகள் உள்ளன. நாட்டார் வழக்காற்றில் மகாத்மா எப்படி பேசப்படுகிறார் என்பதன் அடிப்படையில் எழுதப்பட்டவை.

நான்காம் பகுதியில் விழாக்கள் எனும் தலைப்பில் உள்ள நான்கு கட்டுரைகளும் - சரஸ்வதி பூஜை, சித்திரை விஷூ, தீபாவளி, ஆந்திர கலைகள் ஆகியவற்றை பற்றியவை. பின்னிணைப்பில் பிள்ளையைக் கொன்ற பாட்டு என்னும் சிந்து பாடல் இணைக்கப்பட்டுள்ளது.