அத்யாத்ம ராமாயணம்

 Publisher: காலச்சுவடு பதிப்பகம்.
 Published: அக்டோபர் 2023
 Category: கட்டுரை
 Pages: 194

சமஸ்கிருத மொழியில் அமைந்த (கிபி 14 நூற்) ராமாயணத்தின் சுருங்கிய வடிவம் அத்யாத்ம ராமாயணத்திற்கு முதலில் 1896 இல் ஒரு மொழிபெயர்ப்பு வந்தது 1901, 1909, 1914 , 2009 , 2014 ஆகிய ஆண்டுகளிலும் வந்துள்ளன இவை எல்லாமே மணிப்பிரவாளம் சாயலான நடையில் கடினமான சொற்களில் உள்ளன அத்யாத்ம ராமாயணம் பெரும்பாலும் தமிழ் வாசகன் அறியாதது அது பற்றிய கட்டுரைகளும் குறையும் இந்த ராமாயணத்தின் ஆசிரியர் பெயர் அறியுமாறில்லை ராமானந்தர் என்று ஊகிக்கின்றனர் இந்நூல் வைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது இது இனிய சந்தம், பக்தி, தாந்திரீகம் செல்வாக்குடையது தத்துவார்த்த விசாரமுடையது இதில் ராமன் பரம்பொருளாகக் காட்டப்படுகிறான் பரமசிவன் பார்வதிக்குக் கூறுவது போன்று அமைந்தது இந்த ராமாயணம் இது ஏழு காண்டம் 65 சருக்கம் 4399 சுலோகங்கள் உடையது இந்த நூல் ராமாயணக் கதையைச் சுருக்கமாகத் தருகிறது ஏழு காண்டங்களும் 75 உள் தலைப்புகளும் கொண்டது. எளிய நடையில் அமைந்தது சாதாரண வாசகன் இதைப் புரிந்து கொள்ள முடியும்.