அகிலத்திரட்டு அம்மானை

 Publisher: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் .
 Published: Jul, 2009
 Category: கட்டுரை
 Pages: 591

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த ஆன்மீகவாதிகளில் சமூகப் புரட்சி செய்த வரும் மக்களுக்கு நல்வாழ்வு வாழ வழி காட்டிய வரும் ஆன அய்யா வைகுண்டர் அருளிய கருத்துக்கள் பாடல் வடிவில் உள்ளன இது அகில திரட்டு என்னும் பெயரில் வழங்கப்படுகிறது அய்யா வைகுண்டர் 1809 ல் பிறந்து 1851 ல் சமாதி ஆனவர் என்ற கருத்து உண்டு இவர் 1813 ல் பிறந்தார் என்றும் கொள்கின்றனர் ஐயா ஞானம் பெற்றபின் 1837 ல் கைது செய்யப்பட்டார் என்றும் கூறுகின்றனர் 15 196 வரிகள் கொண்ட இந்த அம்மானைப் பாடல் ஏட்டு வடிவிலும் புத்தக வடிவிலும் உள்ளது ஐயா வைகுண்டரின் வழியை பின்பற்றும் அய்யாவழி காரர்கள் இந்தப் பாடல்களைப் பாராயணம் செய்வது என்ற வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது இந்த நூலுக்கு நல்ல பதிப்பு முன்பு கிடையாது அய்யா வழியை சார்ந்தவரும் சிறந்த ஆன்மீக வாதியும் ஆன பாலபிரஜாபதி அடிகளார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வும் பதிப்பிக்க உதவி செய்வதாக வாக்களித்ததாலும் காலச்சுவடு பதிப்பகம் வழி அ கா பெருமாள் இதை பதிப்பித்தார் இந்தப் பதிப்பில் 93 பக்க ஆய்வுரை உள்ளது அகிலத் திரட்டு பற்றி வெளிவந்த பல விஷயங்கள் இந்த ஆய்வு நூலில் உள்ளன இந்நூலின் முதல் பதிப்பு 1500 பிரதிகள் ஒரே ஆண்டில் விற்றுவிட்டன என்றாலும் சில காரணங்களால் இதன் அடுத்த பதிப்பு வரவில்லை.