அலைகளினூடே

 Publisher: யுனைடட் ரைட்டர்ஸ் , சென்னை.
 Published: Dec, 2005
 Category: கட்டுரை
 Pages: 270

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடற்கரைப் பகுதிகளை ஆழிப்பேரலை தாக்கியபோது (2004 டிசம்பர் 26,) பெரும் இழப்புகளை சந்தித்த கடற்கரை மக்களை ஒருங்கு கூட்டி பிரச்சனை விவாதிக்கப்பட்டது நாகர்கோவில் கார்மல் பள்ளியில் இயேசு சபை நடத்திய கருத்தரங்கில் இந்த விவாதப் பொருள் பதிவு செய்யப்பட்டது (2005 மேய் 14, 15 ) அப்போது இந்த மாவட்டத்தில் வாழும் கடற்கரை மக்கள் பற்றி 9 பேர்கள் கட்டுரைகள் படித்தார்கள் கன்னியாகுமரி மாவட்ட கடலும் கடல் சூழலிலும் ,வழக்காறு , கடல் மக்களின் கத்தோலிக்கம் , சுனாமி அனுபவங்கள் முக்குவர் மக்களின் இருக்கை எனும் பல்வேறு தலைப்புகளில் பேசப்பட்ட கட்டுரைகள் செப்பனிடப்பட்டு நூல்வடிவில் கொண்டுவரப்பட்டது இந்நூலின் பின்னிணைப்பில் கன்னியாகுமரி மாவட்ட ம் கடற்கரையோர 43 மீனவ கிராமங்கள் பற்றிய விரிவான செய்திகள் உள்ளன மேலும் கடன் தொழில் கூடிய பொருள்கள் கடல்சார் மக்களின் தொழிலுக்குரிய பொருள்களின் படியல் தொழில் தொடர்பான சொற்கள் கடல்சார் மக்களின் சடங்குகள் தொடர்பான சொற்கள் ஆகியனவும் தொகுக்கப்பட்டுள்ளன ஒருவகையில் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை மக்களைப் பற்றிய விரிவான பதிவு இந்த நூல் என்று கூறலாம் இந்நூல் இரண்டு பதிப்புகளைக் கண்டுள்ளது.