அடிமை ஆவணங்கள்

 Publisher: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
 Published: Jan, 2021
 Category: கட்டுரை
 Pages: 127

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவணங்களிலும் கல்வெட்டுகளிலும் காணப்படும் 19 அடிமை ஆவணங்களின் செம்பதிப்பு இவற்றில் சீதன ஆவணம் வெள்ளாட்டி அடிமை ஆவணம் தர்மப் பிரமாண ஆவணம் ஆகியனவும் உண்டு . இந்த ஆவணங்களுக்கு அறிமுக விளக்கமும் உண்டு நூலின் பின்னிணைப்பில் அடிமை ஆவணம் தொடர்பாக பதினோரு மூல ஒலைகள் கொடுக்கப்பட்டுள்ளன மேலும் உதவிய நூற்களின் பட்டியலில் கையெழுத்துப் பிரதிகள் ஏடுகள் கதைப்பாடல்கள் ஆகியவற்றின் பட்டியல் உள்ளன நூலின் 64 பக்க முகவுரை ஆய்வுரையாக விளங்குவது இதில் திருவிதாங்கூர் ராஜ்யத்தில் நிலவிய அடிமை முறை பற்றிய விவரமான செய்திகள் வருகின்றன மேலும் ஒடுக்கப்பட்டவர்கள் என்று கருதப்பட்டவர்கள் சொந்த வீடு உடையவர்கள் வருவாய் நிலம் உடையவராய் வாழ்ந்தனர் என்பதற்கு உரிய சான்றுகளும் கொடுக்கப்பட்டுள்ளன கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாதி பின்னணி பற்றிய செய்திகள் கதைப்பாடல்களில் இருந்து சேகரித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது ஒருவகையில் கதைப்பாடல்கள் வழி பண்பாட்டை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியை இந்த நூலில் காணலாம்.